பல்லடம்: பல்லடம் அருகே 22 வயது பெண் ஆணவக் கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதைக்கப்பட்ட பெண்ணின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். காதலியின் சாவில் மர்மம் இருப்பதாக காதலன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.