பஞ்சாப் மாநிலம்,டரன் டரன் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் கடந்த ஆண்டு அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக அனுப்பப்பட்டார். அந்த நபரை அமெரிக்க அரசு கடந்த பிப்ரவரி மாதம் நாடு கடத்தியது. அவர் டெல்லியை சேர்ந்த ஏஜென்ட்டான ககன்தீப் சிங் என்ற கோல்டிக்கு ரூ.45 லட்சம் கொடுத்ததாகவும் அவர் மூலம் டாங்கி ரூட் வழியே அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டதாக கூறினார். இது குறித்து பஞ்சாப் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு(என்ஐஏ) மாற்றப்பட்டது. இது குறித்து விசாரித்து என்ஐஏ மேற்கு டெல்லி திலக்நகரில் கோல்டியை நேற்று கைது செய்தது.
The post அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக ஆள் கடத்தலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி கைது appeared first on Dinakaran.