ஒன்றிய பணியாளர்,பொதுமக்கள் குறைதீர்ப்பு, சட்டம் மற்றும் நீதி துறையை சார்ந்த நாடாளுமன்ற நிலைக்குழு ஒன்றிய பொது துறை நிறுவனங்களில் ஆய்வு செய்து அதன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் கடந்த 27ம் தேதி சமர்ப்பித்துள்ளது. அதில், கூறப்பட்டுள்ளதாவது: ஒன்றிய பொது துறை நிறுவனங்களின் உயர் பதவிகளில் மிகுந்த பாலின இடைவெளி உள்ளது.
பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்ற அரசின் கொள்கைக்கு ஏற்ப உள்ளடக்கிய மற்றும் பொறுப்புணர்வுள்ள நிர்வாகத்திற்கு பாலின சமத்துவம் முக்கியமானது. எனவே,பொது துறை நிறுவனங்களின் தலைமை பதவிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பதற்கான காரணங்கள் குறித்து ஆராய வேண்டும். மேலும், அவர்களின் முன்னேற்றத்தின் தடைகளை அகற்ற உறுதியான நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
The post பொதுத்துறை நிறுவன தலைமை பதவிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவு: நாடாளுமன்ற நிலைக்குழு தகவல் appeared first on Dinakaran.