நேற்றைய நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
இந்த மாதம் முழுவதும் நாட்டின் பல மாநிலங்களிலும் பல்வேறு பண்டிகைகள் கோலாகலமாகக் கொண்டாடப்பட இருக்கின்றன. இது திருநாட்களுக்கான மாதம். இந்த பண்டிகைகள் மூலம் இந்தியா எவ்வாறு வேற்றுமையில் ஒற்றுமை காண்கிறது என்பதை காண முடிகிறது. இந்த ஒற்றுமை உணர்வைத்தான் நாம் மேலும் மேலும் பலப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.
இப்போது தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறைக்காலம் வந்துவிட்டது. இந்த விடுமுறையில் மாணவ, மாணவிகள் தங்கள் திறன்களை மேலும் கூர்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான வாய்ப்புகளுக்கு இன்று குறைவே இல்லை. ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர், மேடைநாடகம், தலைமைப்பண்பு என ஏதாவது ஒரு பயிற்சியில் ஈடுபடுத்தி திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். அதில் உங்கள் அனுபவத்தை கண்டிப்பாக என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
இப்போது அடிக்கடி புதிய உடைகள் வாங்கும் வழக்கம் உலகம் முழுவதும் பெருகிவிட்டது. அப்படியென்றால் நீங்கள் அணிந்த பழைய துணிகள் என்ன ஆகிறது? அவைகள் தான் ஜவுளிக்கழிவுகள். ஜவுளித்துறைக் கழிவுகளை ஏற்படுத்தும் உலகின் 3வது மிகப்பெரிய நாடாக இந்தியா விளங்குகிறது. இது நம் முன்பாக இருக்கும் மிகப்பெரிய சவால். ஆனாலும், இந்தச் சவாலை எதிர்கொள்ள பல பாராட்டத்தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜவுளித்துறைக் கழிவுகளிலிருந்து அழகுப் பொருட்கள், கைப்பைகள், காகிதங்கள், விளையாட்டுப் பொருட்கள் போன்ற பல பொருட்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
சில அமைப்புகள் பழைய துணிகளைக் கொண்டு, அவற்றை மீண்டும் பயன்படுத்தும் வகையில் தயார்படுத்தி, ஏழைகளுக்குக் கொண்டு சேர்க்கின்றார்கள். அரியானாவின் பானிபட் ஜவுளிகளின் மறுசுழற்சியில் உலக மையமாக ஆகி வருகின்றது. பெங்களூரூவிலும் தொழில்நுட்ப ரீதியாக தீர்வு காணப்படுகிறது. இதைப் போலவே தமிழ்நாட்டின் திருப்பூர் கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி வாயிலாக, ஜவுளித்துறை கழிவுகளின் மேலாண்மை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
காங். ஆட்சியில் நக்சலிசம் வளர்ந்தது: மோடி
மகாராஷ்டிரா மாநிலம் பிலாஸ்பூரில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது, “காங்கிரஸ் ஆட்சியின கொள்கைகளால் சட்டீஸ்கர் உள்ளிட்ட மாவட்டங்களில் நக்சலைட்டுகள் ஊக்கம் பெற்று வளர்ந்தனர். இதனால் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. அப்போது நாட்டை 60 ஆண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸ் இந்த மாவட்டங்களை பின்தங்கிய மாவட்டங்களாக அறிவித்து பொறுப்பில் இருந்து விலகி சென்றது” என குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய மோடி, “இரட்டை எஞ்சின் ஆட்சியில் சட்டீஸ்கரின் நிலைமை வேகமாக மாறி வருகிறது. வளர்ச்சி, நலத்திட்ட முயற்சிகள் காரணமாக நக்சல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதியின் புதிய சகாப்தம் தொடங்கி உள்ளது” என்றார்.
இதனிடையே, உள்துறை அமைச்சர் அமித் ஷா தன் எக்ஸ் தள பதிவில், “சட்டீஸ்கரில் 50 நக்சல்கள் சரணடைந்தது மகிழ்ச்சி. ஆயுதங்களை கைவிட்டு வளர்ச்சி பாதையை ஏற்று கொள்பவர்கள் மறுவாழ்வு பெறுவார்கள். இதுவரை சரணடையாதவர்கள் ஆயுதங்களை கைவிட்டு வளர்ச்சி நீரோட்டத்தில் இணைய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
The post பிரதமர் மோடி பாராட்டு; ஜவுளிக்கழிவு மேலாண்மையில் சிறப்பாக செயல்படும் திருப்பூர்: கோடை விடுமுறையில் திறமையை வளர்த்துக் கொள்ள வலியுறுத்தல் appeared first on Dinakaran.