பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கு பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைப்பு: அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கு பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. ரூ.10 லட்சம் வரை வீடு, மனை, விளை நிலம் போன்ற அசையா சொத்துகள் பெண்கள் பெயரில் வாங்கினால் பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும். தற்போது மேற்கொள்ளப்படும் பத்திரப் பதிவுகளில் 75% பதிவுகள் இந்த அறிவிப்பினால் பயன்பெற இயலும்

தமிழகத்தில் சமீபத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போது பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் 10 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் வீட்டுமனை போன்றவைகளுக்கு ஒரு சதவீதம் பதிவு கட்டணம் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீடு, மனை, விளைநிலம் போன்ற அசையா சொத்துக்களை பெண்கள் வாங்கினால் அவர்களுக்கு ஒரு சதவீதம் வரை பதிவு கட்டணம் குறைக்கப்படும்.

இந்த புதிய கட்டண குறைப்பு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் பெண்களுக்கு என்று திமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் தற்போது பத்திரப்பதிவுக்கு ஒரு சதவீத கட்டண குறிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது

The post பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கு பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைப்பு: அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Related Stories: