அதகப்பாடி புதிய காலனியில் குழாய் பழுதால் குடிநீர் சப்ளை பாதிப்பு

பாப்பாரப்பட்டி, டிச.20: இண்டூர் அருகே உள்ள அதகப்பாடி புதிய காலனியில், சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஒகேனக்கல் குடிநீர் வழங்க தெருக்களில் பொது குடிநீர் குழாய் மற்றும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு உள்ளது. இதில் முறையாக குடிநீர் வருவதில்லை.‌ மேலும் இந்த குழாய்கள் உடைந்து பழுதான நிலையில் கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் தினமும் ஒரு கிமீ தூரத்துக்கு மேல் நடந்து மற்றும் டூவீலர்களில் சென்றும் குடிநீர் பிடித்து வரவேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும், குடிநீர் பிரச்னையை தீர்க்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பழுதடைந்த ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய்களை சீரமைத்து, முறையாக தினசரி போதிய அளவுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என, புதிய காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: