* வாழ்ந்து காட்டுவோம் திட்டம் 2.0 வெற்றி பெற்றதன் அடிப்படையில் நடப்பாண்டில் மேலும் 120 வட்டாரங்களில் ரூ.1000 கோடியில் உலக வங்கியுடன் இணைந்து வாழ்ந்து காட்டுவோம் திட்டம் 3.0 துவங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* 42000 கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி ரூ.66 கோடியில் வழங்கப்படும்.
* பழங்குடியினர், முதியோர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கையர் உள்ளிட்ட 2500 சிறப்பு சுய உதவிக் குழுக்களுக்கு நடப்பாண்டில் ரூ.25 கோடியில் வாழ்வாதார நிதியாக வழங்கப்படும்.
* நடப்பாண்டில் 6000 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.90 கோடியில் சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும்.
* அனைத்து மாவட்டங்களிலும் உள்ளூர் வல்லுநர்களை கொண்டு ஊரக இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க 2500 புதிய சமுதாய திறன் பள்ளிகள் ரூ.25 கோடியில் உருவாக்கப்படும்.
* 15000 சுய உதவிக் குழுக்களுக்கு 22.50 கோடி சுழல் நிதி வழங்கப்படும்.
* வலிமையான இளைஞர்களை ஊருவாக்கி வளமான தமிழகம் படைத்திட போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி ரூ.2.50 கோடியில் வழங்கப்படும்.
* மாநிலம் முழுவதும் 100 மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் இளைஞர் திறன் திருவிழாக்கள் ரூ.1 கோடி செலவில் நடத்தப்படும்.
* மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் விதமாக அடுக்குமாடி மற்றும் பெருநிறுவனங்களில் 25 கண்காட்சிகள் ரூ.60 லட்சத்தில் நடத்தப்படும்.
* சிறப்பாக செயல்படும் சுய உதவிக்குழுக்கள் மற்றும் அவைகளின் கூட்டமைப்புகள் பட்டறிவு பயணம் மேற்கொள்ள ரூ.50 லட்சம் செலவில் பிற மாநிலங்களுக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.
* தேசிய மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் 1000க்கும் மேற்பட்ட உற்பத்தி பொருட்களை வர்த்தக இணைய தளங்களில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பதிவேற்றம் செய்யப்படும்.
* நகர்ப்புறத்தில் உள்ள 100 சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக 100 மின் ஆட்டோக்கள் வழங்கப்படும்.
The post 120 வட்டாரங்களில் ரூ.1000 கோடியில் வாழ்ந்து காட்டுவோம் 3.0 திட்டம்: துணை முதல்வர் அறிவிப்பு appeared first on Dinakaran.