வட தமிழக உள் மவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் அதிகபட்சமாக 104 டிகிரியாகவும், தென் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் 99 டிகிரியாகவும், வட தமிழக கடலோரப் பகுதிகளில் 104 டிகிரியாகவும் வெயில் நிலவியது. அதன் தொடர்ச்சியாக வேலூர் மாவட்டத்தில் நேற்று 106 டிகிரி(இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகம்) வரை வெயில் கொளுத்தியது. சேலம், கரூர் பரமத்தி 104 டிகிரி(இயல்பைவிட 1.8 டிகிரி செல்சியஸ் அதிகம்), ஈரோடு, மதுரை 102 டிகிரி(இயல்பைவிட 2.6 டிகிரி செல்சியஸ் அதிகம்) வெயில் கொளுத்தியது.
இது தவிர திருத்தணி, திருச்சி, திருப்பத்தூர், தர்மபுரி 100 டிகிரி, சென்னை, கடலூர், புதுச்சேரி 99 டிகிரி வெயில் நிலவியது. இந்நிலையில், தென்னிந்தியப் பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில்,கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதிகள் நிலை கொண்டுள்ளன. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் நேற்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது.
இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவியது. அதன் தொடர்ச்சியாக இன்றும் நாளையும் வறண்ட வானிலை நிலவும். 31ம் தேதியில் ெ தன் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுவாக வறண்ட வானிலை காணப்படும். மேலும், 30ம் தேதி வரையில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரும். 31ம் தேதியும் ஏப்ரல் 1ம் தேதியும் வெப்பநிலை சற்று குறையும்.
The post வேலூரில் 106 டிகிரி கொளுத்தியது 5 மாவட்டங்களில் கடும் வெயில் appeared first on Dinakaran.