இயற்கை உபாதை கழிக்க சென்ற போது 10 இளைஞர்களால் 16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்: பீகாரில் அட்டூழியம்

தர்பங்கா: இயற்கை உபாதை கழிக்க சென்ற போது 16 வயது சிறுமி 10 இளைஞர்களால் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பீகாரில் நடந்துள்ளது. பீகார் மாநிலம் தர்பங்கா அடுத்த பஹேதா காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட மஹினம் கிராமத்தில் கடந்த 15ம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. அன்றிரவு 16 வயது சிறுமி ஒருவர், இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது அப்பகுதியில் குடிபோதையில் இருந்த இளைஞர்கள் சிலர், அந்த சிறுமியை கடத்திக் கொண்டு காட்டுப் பகுதிக்கு சென்றனர். ஏற்கனவே அங்கு சில இளைஞர்கள் இருந்தனர். பின்னர் அங்கிருந்த இளைஞர்கள் அந்த சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

அவர்கள் பலாத்காரம் செய்ததை அவர்களின் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். பின்னர் அந்த சிறுமியை விடுவித்தனர். வெளியே சொன்னால் வீடியோவை வெளியிடுவதாகவும் கூறி மிரட்டினர். அவர்களின் மிரட்டலுக்கு பயந்த சிறுமி, கடந்த ஒரு வாரமாக தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது பெற்றோரிடம் கூறவில்லை. இருந்தும் சோர்வுடன் காணப்பட்ட மகளின் நிலை குறித்து அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவர்கள் பரிசோதித்ததில், கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு சிறுமி உட்படுத்தப்பட்டதாக தெரியவந்தது. இவ்விவகாரம் போலீசுக்கு தெரியவரவே, அவர்களும் சிறுமியிடம் தனியாக வாக்குமூலம் பதிவு செய்தனர். அதன்பின் சிறுமிக்கு தொடர் பரிசோதனை மற்றும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பஹேரா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகாந்த் கவுடி கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளோம். சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. குற்றம் நடந்த இடமும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நடந்த இடத்தில் ரத்தக் கறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மிகவும் தாமதமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமியை 10 பேர் கொண்ட இளைஞர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களில் 5 பேரை கைது செய்துள்ளோம். தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகிறோம்’ என்றார்.

The post இயற்கை உபாதை கழிக்க சென்ற போது 10 இளைஞர்களால் 16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்: பீகாரில் அட்டூழியம் appeared first on Dinakaran.

Related Stories: