மக்களவை தேர்தலில் காங்கிரசார் கடினமாக உழைத்திருந்திருந்தால் 20 அல்லது 30 இடங்களை அதிகமாக பெற்றிருக்கலாம். அப்படி பெற்றிருந்தால் இந்தியா கூட்டணி பலம் பெற்று, ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுத்திருக்கும். இதை நாம் சாதித்திருந்தால் ஜனநாயகம், அரசியலமைப்பு மீதான திட்டமிட்ட தாக்குதலை நிறுத்தியிருக்கலாம். பாஜ, ஆர்எஸ்எஸ்சுக்கு எதிரான காங்கிரசின் யுத்தம் நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியிலும் தொடர்கிறது.
இதை வீதிக்கு கொண்டு செல்ல வேண்டும். திறமையான அர்ப்பணிப்புள்ள கடின உழைப்பாளிகள் மாவட்ட தலைவர்களாக நியமிக்கப்பட வேண்டியது அவசியம். மிக முக்கியமாக, சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான நீண்டகால உத்தியுடன் ஒற்றுமையாக நீங்கள் செயல்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
நமது கட்சியின் சித்தாந்தம் வலுவானது, ஆனால் அதிகாரம் இல்லாமல், அதை செயல்படுத்த முடியாது. அடுத்த ஆண்டில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெறும் தேர்தலில் தங்கள் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வேட்பாளரின் வெற்றியையும் உறுதி செய்வது மாவட்ட தலைவர்களின் பொறுப்பாகும். இவ்வாறு கார்கே அறிவுறுத்தினார்.
The post தேர்தல்களில் வெற்றி பெறும் உத்தியுடன் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல் appeared first on Dinakaran.