செப்டம்பர் மாதத்திற்குள் ரூ.8 லட்சம் கோடி கடன் வாங்க ஒன்றிய அரசு திட்டம்

புதுடெல்லி: செப்டம்பர் மாதத்திற்குள் ரூ.8 லட்சம் கோடி கடன் வாங்க திட்டமிட்டு இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: 2025-26 நிதியாண்டின் முதல் பாதியில் ரூ.8 லட்சம் கோடி கடன் வாங்க அரசு திட்டமிட்டுள்ளது.

வருவாய் இடைவெளியை ஈடுகட்டுவதற்காக ஏப்ரல்-செப்டம்பர் காலகட்டத்தில் தேதியிட்ட பத்திரங்கள் மூலம் ரூ.8 லட்சம் கோடியைத் திரட்ட ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட ரூ.14.82 லட்சம் கோடி மொத்த சந்தைக் கடனில், ரூ. 8 லட்சம் கோடி அல்லது 54 சதவீதம் முதல் பாதி காலாண்டில் கடனாகப் பெற திட்டமிடப்பட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை ரூ.15,68,936 கோடியாக இருக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post செப்டம்பர் மாதத்திற்குள் ரூ.8 லட்சம் கோடி கடன் வாங்க ஒன்றிய அரசு திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: