இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சென்னை விமான நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “அதிமுகவில் இணைகிறேன் என நான் சொல்லவே இல்லை. பிரிந்து கிடக்கிற அதிமுக சக்திகள் இணைய வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும் என்றுதான் திரும்பத் திரும்ப சொல்கிறேன். ஆனால், அதிமுக எந்தக் காலத்திலும் வெற்றி பெறக் கூடாது என நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பழனிசாமி தானாகவே விலகிக் கொள்வதுதான் அவருக்கு மரியாதை. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி விலகவில்லையென்றால் அவமரியாதையை சந்திப்பார். சென்னையில் அதிமுக அலுவலகம் மீது நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை. அதிமுக அலுவலகத்தை இபிஎஸ் தரப்பினர் தாக்கிவிட்டு எங்கள் மீது பழி போடுகின்றனர்,”இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post அதிமுக எந்தக் காலத்திலும் வெற்றி பெறக் கூடாது என நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி : ஓபிஎஸ் கடும் தாக்கு appeared first on Dinakaran.