தஞ்சாவூர், மார்ச் 27: கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் சங்கத்தின் 41வது ஆண்டு பேரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. தஞ்சாவூர் கீழராஜ வீதி மாவட்ட ஏஐடியுசி அலுவலகத்தில், சிபிஐ முன்னாள் மாவட்ட செயலாளர் திருஞானம், டாஸ்மாக் சங்க தலைவர் இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்திற்கு மத்திய சங்கத் தலைவர் சேகர் தலைமை வகித்தார். 41வது பேரவை கொடியை ஏஐடியுசி மாவட்ட தலைவர் சேவையா ஏற்றி வைத்தார். துணைத் தலைவர் சந்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார். அஞ்சலி தீர்மானத்தை சங்கத்தின் செயலாளர் தமிழ்மன்னன் வாசித்தார். ஏஐடியுசி மாநில செயலாளர் தில்லைவனம் பேரவையை துவக்கி வைத்து உரையாற்றினார். சங்கத்தின் பொதுச்செயலாளர் தாமரைச்செல்வன் நடைபெற்ற பணிகள் குறித்து வேலை அறிக்கை முன்வைத்தார். பொருளாளர் ராஜமன்னன் வரவு செலவு அறிக்கை வாசித்தார். பேரவையில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலத் துணைத் தலைவர் துரை.மதிவாணன், சங்கத்தின் கௌரவத் தலைவர் சுந்தர பாண்டியன்,ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் அப்பாதுரை, நிர்வாகி தங்கராஜ் மற்றும் சங்க நிர்வாகிகள் இளங்கோவன், வேம்பையன், சுமன், முருகவேல் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
The post ஏஐடியுசி போக்குவரத்து தொழிற்சங்க 41வது ஆண்டு பேரவைக் கூட்டம் appeared first on Dinakaran.
