இதுகுறித்து நேற்று தனது பேஸ்புக்கில் மோகன்லால் வெளியிட்டுள்ள பதிவில், ‘நான் நடித்து திரைக்கு வந்துள்ள ‘எல் 2: எம்புரான்’ படத்தில் இடம்பெற்றுள்ள சில அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள், எனது அன்புக்குரியவர்கள் பலருக்கு அதிக மன உளைச்சலை ஏற்படுத்தி இருப்பதை அறிந்தேன். எனது படங்கள் எந்தவொரு அரசியல் இயக்கம், சித்தாந்தம் அல்லது பிரிவினர் மீது வெறுப்பை தூண்டும் விதத்தில் இல்லை என்பதை உறுதி செய்வது, ஒரு கலைஞனாக எனது கடமை என்று நினைக்கிறேன்.
அந்த பொறுப்பு படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் இருக்கிறது. இதனால் ஏற்பட்ட துயரத்திற்கு வருந்துகிறேன். இதற்கு பொறுப்பேற்கும் விதமாக, படத்தில் இருந்து அந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க முடிவு செய்துள்ளோம். எனது 47 வருட திரையுலக வாழ்க்கையில் நான் உங்களில் ஒருவனாக வாழ்ந்து வருகிறேன். உங்களின் அன்பும், நம்பிக்கையும் மட்டுமே எனது மிகப்பெரிய பலம். அது இல்லாமல் மோகன்லால் இல்லை’ என்று கூறியுள்ளார்.
The post ‘எல் 2: எம்புரான்’ படத்துக்கு கடும் எதிர்ப்பு; மோகன்லால் பகிரங்க மன்னிப்பு கேட்டார் appeared first on Dinakaran.