இதன் அடிப்படையில் அவரை சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு மாற்றம் செய்து அப்பிரிவில் காவல்துறை கூடுதல் காவல் கண்கணிப்பாளராக நியமிக்கப்பட்டார். ஆயுதப்படை பிரிவியில் இருந்து சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு முத்துமாணிக்கத்தை மாற்றியதை எதிர்த்தும், பதவி உயர்வு வழங்கியதை எதிர்த்தும் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அப்போதைய முதல்வரின் பாதுகாவலர் என்ற காரணத்திற்காக அவரை, ஆயுத படை பிரிவில் இருந்து சட்டம் ஒழுங்கு பிரிவிற்கு மாற்றியது செல்லாது என்று அறிவித்து அது சம்பந்தமான உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. ஆயுத படையில் தொடர்ந்து கூடுதல் கண்காணிப்பாளராக பணியை தொடரலாம் என்று உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து முத்துமாணிக்கம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள் முருகன் ஆகியோர், அவசர மற்றும் சிறப்பு நிகழ்வுகளின் போது மட்டும் தான் விதிகளில் விலக்களிக்க முடியும். ஆனால் முதலமைச்சரின் பாதுகாவலர் என்ற காரணத்திற்காக முத்துமாணிக்கத்திற்கு விதி விலக்கு வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணை சட்ட விரோதமானது. இதன் மூலம் 770 காவல் துறை அதிகாரிகளை பின்னுக்கு தள்ளி முத்துமாணிக்கத்திற்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. எனவே, உத்தரவை ரத்து செய்த தனிநீதிபதியின் உத்தரவு சரிதான் எனக்கூறி மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
The post ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியை இடமாற்றம் செய்த உத்தரவு ரத்து செல்லும்: ஐகோர்ட் அமர்வு தீர்ப்பு appeared first on Dinakaran.