மதுரை: 2020ம் ஆண்டில் சாத்தன்குளம் தந்தை – மகன் அடித்துக்கொல்லப்பட்ட வழக்கில், சிறையில் உள்ள முன்னாள் எஸ்.ஐ.ரகு கணேசனின் ஜாமின் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்கின் விசாரணையை 2 மாதங்களில் முடிக்கவும் கீழமை நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.