பெங்களூருவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் லோக்நாத் சிங் (37) மற்றும் யஷஸ்வினி சிங் (19) ஆகிய இருவருக்கும் திருமணம் நடந்ததிலிருந்து யஷஸ்வினி சிங், சிக்கபானவராவில் உள்ள தாய் ஹேமா பாய் வீட்டில் வசித்துவந்தார். லோக்நாத் சிங்கிற்கு பல பெண்களுடன் தகாத உறவு இருந்ததால் யஷஸ்வினி, விவாகரத்து கேட்டுள்ளார். இந்நிலையில், லோக்நாத் சிங்கை காரில் அழைத்துச் செல்லுமாறு கேட்ட யஷஸ்வினி சிங், சாப்பாட்டில் தூக்க மாத்திரை கலந்து எடுத்துச் சென்றார்.
வழியில் லோக்நாத் சிங் காரை சோலதேவனஹள்ளியில் நிறுத்தி லோக்நாத் பீர் குடித்திருக்கிறார். அப்போது தூக்க மாத்திரை கலந்த சாப்பாட்டை யஷஸ்வினி கொடுக்க, அதை சாப்பிட்டுவிட்டு லோக்நாத் காரிலேயே மயங்கிவிட்டார். யஷஸ்வினியின் தாய் ஹேமா பாய், ஆட்டோவில் அந்த காரை பின்தொடர்ந்தே சென்று, காரில் மயங்கிக்கிடந்த லோக்நாத்தை யஷஸ்வினியும், ஹேமா பாயும் சேர்ந்து கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றனர்.
The post ரியல் எஸ்டேட் தொழிலதிபரை கழுத்தறுத்து கொலை செய்த மனைவி, மாமியார் கைது: பெங்களூருவில் பயங்கரம் appeared first on Dinakaran.