இந்த நிலையில், மார்ச் 29-ந் தேதி சனிப்பெயர்ச்சி நிகழாது என புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “மார்ச் 29-ம் தேதி சனி பெயர்ச்சி நிகழும் என்ற தகவல்கள் பரவலாக வெளிவந்துள்ளன. திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் வாக்கிய பஞ்சாங்கம் முறையை பின்பற்றுவதை தெளிவுபடுத்துகிறோம். பாரம்பரிய கணிப்பு முறைப்படி நடப்பு 2025-ம் ஆண்டு மார்ச் 29-ந் தேதி சனிப்பெயர்ச்சி நிகழாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அதேநேரத்தில் வரும் 29-ந் தேதி திருநள்ளாறு கோவிலில் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெறும். சனிப்பெயர்ச்சியானது 2026-ம் ஆண்டுதான் நிகழும். இது தொடர்பான தேதி பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்,” என தெரிவித்துள்ளது. மேலும், பக்தர்கள், ஜோதிடர்கள், அர்ச்சகர்கள் மற்றும் பொது மக்கள் திருநள்ளாறு கோயிலில் பின்பற்றப்படும் பாரம்பரிய வாக்கிய பஞ்சாங்க வழிபாட்டு மரபை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post சனிப் பெயர்ச்சி மார்ச் 29-ந் தேதி நிகழாது : திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.