சென்னை: தமிழ்நாட்டில் ஏப்ரல் 1ம் தேதி முதல் 40 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. வானகரம், சூரப்பட்டு, நல்லூர், பரனூர், பட்டரைபெரும்புதூர், ஆத்தூர் உள்ளிட்ட 40 சுங்கச் சாவடிகளில் ரூ.5 முதல் ரூ25 கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. மீதமுள்ள சுங்கச் சாவடிகளில் செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு என கூறப்படுகிறது.