புவியியல் மற்றும் சுரங்கத் துறையில் கடந்த வருட வருவாயைச் சொல்கிறேன். எப்போது எவ்வளவு வருவாயை நாங்கள் உயர்த்தியிருக்கிறோம் என்று சொல்கிறேன். 2020-2021ம் ஆண்டு வருவாய், ரூ.983 கோடியும், 2021-2022ம் ஆண்டு ரூ.1,212 கோடியும், 2022-2023ம் ஆண்டு ரூ.1,679 கோடியும், 2023-24ம் ஆண்டு ரூ.1,835 கோடியும், 2024-25 இந்த ஆண்டு பிப்ரவரி வரை ரூ.1,704 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. அவர்களுக்கு வருமானம் இல்லாமலா போய் விட்டது? ஆக நான்காண்டுகளில் எங்களுடைய ஆட்சியில் ரூ.6,432 கோடி வருமானம் கிடைத்திருக்கிறது.
அதேபோன்று, 45 கல்குவாரிகளை ஏலம் விட்ட வகையில், அதிலே ரூ.125.30 கோடி வருமானம் கிடைத்திருக்கிறது. அண்டை மாநிலங்களுக்கு கனிமங்கள் போய்விட்டன என்று தற்போதுகூட நிறைய பேசினார். அண்டை மாநிலங்களுக்கு கனிமங்களை எடுத்துக்கொண்டு போகக் கூடாது என்று ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அப்போது, “அப்படி எல்லாம் கிடையாது, ஒரு மாநிலத்திலிருந்து, அண்டை மாநிலங்களுக்கு எடுத்துக் கொண்டு போகலாம், இதை தடை செய்ய முடியாது” என்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து விட்டார்கள்.
நாங்கள் சட்டத்திற்கு புறம்பாக கனிமங்களை நாங்கள் அண்டை மாநிலங்களுக்கு அனுப்பவில்லை. இங்கிருந்து திருநெல்வேலி உள்ளிட்ட எல்லா இடங்களிலும் யாரும் திருட்டுத்தனமாக எடுத்துச் செல்ல முடியாது. ஆகையால் இனி கனிம வளங்கள் கொள்ளை போகிறதென்று யாரும் சொல்ல முடியாது. காரணம், ஒரே ஒரு சிறிய கல்லைக்கூட, நம்முடைய அனுமதியில்லாமல் எடுத்துச் செல்ல முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.
The post புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் 4 ஆண்டில் ரூ.6,432 கோடி வருவாய்: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.