வட மாநிலங்களான மேற்கு வங்கம், ஒடிஷா, மத்தியப்பிரதேசம், உ.பி மாநிலங்களில் இருந்து கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு போதைப்பொருள் கடத்தல் நடப்பதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, பஸ், ரயில் மார்க்கமாக கேரளாவிற்கு போதைப்பொருட்கள் கடத்தல் அதிகளவில் நடைபெற்று வருவதாகவும், இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கேரளாவில் அதிகமான தொழிலாளர்களும், மாணவர்களும் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி விட்டனர்.
இதனை ஒழிக்க அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரி நேஷனல் ஜனதா தள் இளைஞரணி அமைப்பினர் வாளையார் டோல்கேட் பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தை ஜனதா தள் இளைஞரணி மாநில பொதுச்செயலாளர் நவுபியா நஷீர் தொடங்கி வைத்து பேசினார். மாநில காசாளர் ஜெயசண் தலைமை வகித்தார். மாநில தலைவர் யூசப் அலி , பாலக்காடு மாவட்ட தலைவர் சூர்யராஜ், செயலாளர் இர்ஷாத் உட்பட இளைஞரணி அமைப்பினர் ஏராளமானோர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்டவர்களை வாளையார் போலீசார் கைது செய்து, பின்னர் விடுதலை செய்தனர்.
The post போதைப்பொருள் கடத்தலை தடுக்க சுங்கச்சாவடியில் மறியல் போராட்டம் appeared first on Dinakaran.