கடலோர மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்: ரஜினிகாந்த் அட்வைஸ் வீடியோ

சென்னை: ‘நம் நாட்டின் நிம்மதியை கெடுக்க கடல் வழியாக பயங்கரவாதிகள் நாட்டுக்குள் புகுந்து கோர சம்பவங்கள் செய்வார்கள். எனவே, சந்தேகத்துக்குரிய நபர்கள் யாராவது நடமாடினால், அருகிலுள்ள போலீஸ் நிலையங்களில் புகார் தெரிவிக்க வேண்டும்’ என்று, நடிகர் ரஜினிகாந்த் நேற்று திடீரென்று அட்வைஸ் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் வணக்கம். நம் நாட்டின் பெயர், நிம்மதி, சந்தோஷம்.

அதை கெடுக்க பயங்கரவாதிகள் கடல் வழியாக நாட்டுக்குள் புகுந்து கோர சம்பவங்கள் செய்வார்கள். அதற்கு உதாரணம், மும்பையில் 26/11ல் நடந்த கோர சம்பவம். கிட்டத்தட்ட 175 பேரின் உயிரை வாங்கிடுச்சு. கடலோரம் வாழும் மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து, சந்தேகத்துக்குரிய நபர்கள் யாராவது நடமாடினால், அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டும்.

இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த 100 சிஐஎஸ்எப் வீரர்கள், கிட்டத்தட்ட 7 ஆயிரம் கிலோ மீட்டர் கடந்து, மேற்கு வங்கத்தில் இருந்து கன்னியாகுமரி வரை பேரணி செல்கின்றனர். அவர்கள் உங்களின் ஏரியாவுக்கு வரும்போது வரவேற்று, முடிந்தால் அவர்களுடன் சிறிது தூரம் சென்று வாருங்கள். நன்றி. வாழ்க தமிழ் மக்கள், வளர்க தமிழ்நாடு, ஜெய்ஹிந்த். இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார். அவர் பேசும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

The post கடலோர மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்: ரஜினிகாந்த் அட்வைஸ் வீடியோ appeared first on Dinakaran.

Related Stories: