திருப்பதியில் நாளை மறுதினம் 4 மணி நேரம் தரிசனம் ரத்து

திருமலை: தெலுங்கு வருட பிறப்பானா யுகாதி பண்டிகை மார்ச் 30ம் தேதி விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் முழுவதும் மார்ச் 25ம் தேதி(நாளை மறுதினம்) சுத்தம் செய்யும் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, அன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை 4 மணி நேரத்துக்கு அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மேலும், அஷ்டதல பாத பத்மாராதனை சேவை அன்று நடைபெறாது. மார்ச் 30ம் தேதி யுகாதி அஸ்தானம் நடைபெறும் என்பதால் சஹஸ்ர தீப அலங்கார சேவையை தவிர மற்ற அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மார்ச் 25 மற்றும் 30ம் தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளது. எனவே மார்ச் 24 மற்றும் 29 ஆகிய நாட்களில் விஐபி தரிசனத்திற்காக எந்த பரிந்துரை கடிதமும் ஏற்கப்படாது.

The post திருப்பதியில் நாளை மறுதினம் 4 மணி நேரம் தரிசனம் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: