ஆறுமுகநேரி, மார்ச் 22: காயல்பட்டினத்தில் எஸ்டிபிஐ சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. நகர தலைவர் முகம்மது ஜலீல் தலைமை வகித்தார். புகாரி குர்ஆன் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் முகம்மது உமர் வரவேற்றார். மாவட்ட தலைவர் அஸ்ரப் அலி பைஜி, மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் காதர், நகராட்சி தலைவர் முத்து முகம்மது, துணை தலைவர் சுல்தான் லெப்பை, அதிமுக திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் பூந்தோட்டம் மனோகரன், எஸ்டிபிஐ தொகுதி தலைவர் அப்துல்லாஹ், செயலாளர் சாகுல்ஹமீத், மதிமுக மாவட்ட பொருளாளர் அமானுல்லா, முஸ்லிம் ஐக்கிய பேரவை தலைவர் முஹ்யித்தீன் தம்பிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அகமது நவவி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ நகர செயலாளர் சல்மான் பாரிஸ், துணை தலைவர் ஜாபர் அலி, இணை செயலாளர் முகைதீன், நகராட்சி கவுன்சிலர் மெய்தீன், த.வெ.க நகர செயலாளர் மெய்தீன், பாதுல் அஸ்ஹாப் உள்பட அனைத்து கட்சி நிர்வாகிகள், காயல்பட்டினம் அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள், பொது நல அமைப்பு நிர்வாகிகள் உள்பட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். எஸ்டிபிஐ நகர பொருளாளர் மூசா நைனா நன்றி கூறினார்.
The post காயல்பட்டினத்தில் இப்தார் நோன்பு திறப்பு appeared first on Dinakaran.
