பிறப்பு, இறப்பு பதிவு அதிகாரிகளுடன் இணைந்து வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பு: தேர்தல் ஆணையம் அறிக்கை

புதுடெல்லி: இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு துறை அதிகாரிகளுடன் ஒத்துழைப்புடன் வாக்காளர் பட்டியலை புதுப்பிப்பிக்கும் செயல்முறை வலுப்படுத்தப்படும். ஒரு வாக்காளர் ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடியில் மட்டுமே வாக்களிக்க முடியும். இது தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனைகளை நடத்தியது. தேர்தல் செயல்முறைகளை வலுப்படுத்துவதற்கான தைரியமான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது. ஒரு வாக்காளர் ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடியில் மட்டுமே வாக்களிக்க முடியும். வேறு எங்கும் வாக்களிக்க முடியாது.

நாடு முழுவதும் போலி வாக்காளர்களை நீக்கவும், பல தசாப்தங்களாக நிலவும் பிரச்னையை மூன்று மாதங்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவரவும் தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது. மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் உட்பட கிட்டத்தட்ட 5,000 தேர்தல் அதிகாரிகள் மார்ச் 31 ம் தேதிக்குள் அரசியல் கட்சிகளுடன் கூட்டங்களை நடத்துவார்கள். வாக்காளர் பட்டியல்-ஆதார் இணைப்பு குறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மற்றும் தேர்தல் ஆணைய நிபுணர்களுக்கு இடையேயான ஆலோசனைகள் விரைவில் தொடங்கும் .

The post பிறப்பு, இறப்பு பதிவு அதிகாரிகளுடன் இணைந்து வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பு: தேர்தல் ஆணையம் அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: