இதனைதொடர்ந்து, பாஜ தொண்டர்கள் கோயிலுக்கு உள்ளே சாமி தரிசனம் செய்ய சென்ற பக்தர்களை தடுத்து நிறுத்தி அவர்களிடம் கட்டாய கையெழுத்து வாங்கினர். இதனால், பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, மாமல்லபுரம் நகராட்சி அலுவலக நுழைவு வாயில் பகுதிக்கு சென்று, அலுவலகத்தில் இருந்த நாற்காலிகளை யாரிடமும் கேட்காமல் எடுத்து வந்து, சேரில் அமர்ந்து அவ்வழியாக சென்றவர்களிடம் கட்டாய கையெழுத்து வாங்கினர். கோயிலுக்கு சாமி தரிசனத்துக்கு சென்ற பக்தர்களை மறித்து மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கட்டாய கையெழுத்து வாங்கிய பாஜ எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி மற்றும் பாஜ கட்சியினருக்கு எதிராக சமூக ஆர்வலர்கள், ஆன்மீகவாதிகள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
The post மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கட்டாய கையெழுத்து இயக்கம் நடத்திய பாஜ எம்எல்ஏ: சமூக ஆர்வலர்கள் கண்டனம் appeared first on Dinakaran.