மாதவரம், மார்ச் 20: அயனாவரம் பகுதியில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக இன்ஸ்பெக்டர் பரணிநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அயனாவரம் சபாபதி தெருவில் உள்ள வீட்டில் சோதனை செய்தபோது, குட்கா பொருட்கள் சிக்கியது. இதுதொடர்பாக காவலாளி ராம்பாபு (39) என்பவரை கைது செய்து விசாரித்தனர். அவர் அளித்த தகவலின்பேரில், வில்லிவாக்கம் சிவன் கோயில் தெருவில் உள்ள வீட்டில் இருந்தும் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வில்லிவாக்கம் ஜெகநாதன் நகரைச் சேர்ந்த பிரகாஷ் (50) என்பவரையும் கைது செய்தனர். மொத்தம் 25 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பிறகு அயனாவரம் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post வீடுகளில் பதுக்கிய 25 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் சிக்கினர் appeared first on Dinakaran.
