தர்மபுரி, மார்ச் 19: தர்மபுரி மாவட்ட சத்துணவு ஓய்வூதியர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடந்தது. தர்மபுரி மாவட்ட புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு ஓய்வூதியர் சங்கத்தின், மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று தர்மபுரியில் நடந்தது. மாவட்ட தலைவர் அருள்அரவிந்தவாணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தண்டபாணி வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் சிவாஜி சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில், மாநில அமைப்பு செயலாளராக கணேசன், ஊத்தங்கரை ஒன்றியம் மணி மாநில பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர்களுக்கு, அடிப்படை ஊதியத்துடன் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். அனைத்து சத்துணவு ஓய்வூதியர்களையும் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைக்க வேண்டும். ஈமச்சடங்கு நிதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில், மாவட்ட அமைப்பு செயலாளர் மாதையன், ஒன்றிய நிர்வாகிகள் முத்துசாமி, முருகேசன், லட்சுமணன், ராமமூர்த்தி, சின்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.
The post சத்துணவு ஓய்வூதியர் சங்க செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.
