தொகுதி மறுவரையறை கூட்டத்தில் கேரள மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பங்கேற்கும்

சென்னை: சென்னையில் மார்ச் 22ம் தேதி நடைபெறும் தொகுதி மறுவரையறை கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில், கேரள மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னாள் எம்எல்ஏ பி.எம்.சலாம் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல், தென்மாநிலங்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, சென்னையில் வரும் 22ம் தேதி தொகுதி மறுவரையறை குறித்த கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் கூட்டத்தில் சையத் சாதிக் அலி ஷிஹாப் பங்கேற்க முடியாத சூழ்நிலையால் அவருக்கு பதில் முன்னாள் எம்எம்ஏ வழக்கறிஞர் பி.எம்.சலாம் பங்கேற்று கட்சியின் நிலைப்பாடு குறித்து எடுத்துரைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தொகுதி மறுவரையறை கூட்டத்தில் கேரள மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பங்கேற்கும் appeared first on Dinakaran.

Related Stories: