பெ.நா.பாளையம். மார்ச் 18: கோவை கவுண்டம்பாளையம் அசோக் நகர் மேல்பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (20), பெங்களூரு ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவர் தனது உறவினருடன் விடுமுறைக்கு வந்துள்ளார். தே பகுதியை சேர்ந்த கிருசத்தியன் (24), சூரியா (21), பிரவீன் ஆகிய 3 பேரும் இடையர்பாளையம் சாலையில் மது அருந்தியுள்ளனர். மீண்டும் மதுவாங்க பணம் கொடுப்பது தொடர்பாக மூன்று பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கிருசத்தியன் மற்றும் சூரியா இருவரும் சேர்ந்து கல் மற்றும் உருட்டுகட்டையால் பிரவீனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த பிரவீனை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பிரவீன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கிருசத்தியன் மற்றும் சூரியா இருவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post மது அருந்த பணம் தராததால் வாலிபருக்கு அடி உதை appeared first on Dinakaran.