தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் தமிழிசை விழா: வரும் 19 மற்றும் 20ம் தேதிகளில் நடைபெறுகிறது

சென்னை: தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2024 – 2025 ஆம் கல்வியாண்டில் 19.03.2025 மற்றும் 20.03.2025 ஆகிய இரண்டு நாட்கள் தமிழிசை விழா நடைபெறவுள்ளது. இவ்விழாவில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் குத்துவிளக்கேற்றி பேருரையாற்ற இசைந்துள்ளார். சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் மருத்துவர் க.மணிவாசன் சிறப்புரையாற்ற இசைந்துள்ளார்.

கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் சே.ரா.காந்தி, இ.ர.பா.ப., மற்றும் அருங்காட்சியங்கள் துறை இயக்குநர் தி.கவிதா ராமு வாழ்த்துரை வழங்க இசைந்துள்ளனர். இவ்விழாவிற்கு வரவேற்புரை வழங்குவதற்கு முனைவர்.பா.சாய்ராம் முதல்வர்(பொ), நன்றியுரை வழங்குவதற்கு ஆ.சரவணன் மிருதங்க விரிவுரையாளர் (சி.நி) அவர்களும் வழங்க இசைந்துள்ளனர். இவ்விழாவில் புகழ் பெற்ற இசை வித்தகர்களின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

மேலும், கல்லூரியின் 2024-2025 ஆம் ஆண்டுக்கான ஆண்டுவிழா மற்றும் விளையாட்டுப்போட்டிகளின் பரிசளிப்புவிழா ஆகியன 21.03.2025 அன்று நடைபெறவுள்ளது. இவ்விழாவில் கலை பண்பாட்டு இயக்கக இணை இயக்குநர் சி.கீதா பி.எஸ்.சி., எம்.ஏ., விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கி விழா தலைமையுரையாற்ற இசைந்துள்ளார்.

19.03.2025 முதல் 21.03.2025 முடிய தமிழிசை விழா மற்றும் ஆண்டுவிழாவில் இசை வல்லுநர்களின் இசை நிகழ்ச்சிகள் மற்றும் மாணாக்கர்களின் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா அகியன நடைபெற உள்ளது. அனைவரும் வந்து விழாவினை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

The post தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் தமிழிசை விழா: வரும் 19 மற்றும் 20ம் தேதிகளில் நடைபெறுகிறது appeared first on Dinakaran.

Related Stories: