கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம்: இந்த கல்வி ஆண்டில் ஆல்- பாஸ் முறையில் எவ்வித மாற்றமும் இல்லை. அப்போது புதிய கல்வி கொள்கையின் மூலம் நவீன குலக்கல்வி திட்டத்தை கொண்டு வருவதாக திமுக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூறினர். இதை எதிர்த்து பாஜ எம்எல்ஏக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த சந்திர பிரியங்கா, அவையில் ஒரே ஒரு பெண் எம்எல்ஏ தான் உள்ளேன். நான் பேசும்போது மட்டும் இத்தனை குறுக்கீடுகள், பெண்களுக்கு எல்லா உரிமையும் கொடுத்து விட்டதாக கூறுகிறீர்கள், ஆனால் என்னை அவையில் பேச கூட அனுமதி மறுக்கிறீர்கள். இது எவ்விதத்தில் நியாயம் எனக்கூறி இருக்கை மீது ஏறி நின்று வாக்குவாதம் செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
The post புதுச்சேரி சட்டசபையில் இருக்கை மீது ஏறி நின்று பெண் எம்எல்ஏ போராட்டம் appeared first on Dinakaran.