நுங்கம்பாக்கத்தில் மாநகராட்சி பூங்காவினை திறந்து வைத்து பார்வையிட்டார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!!

சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் எம்.ஒ.பி. வைணவ மகளிர் கல்லூரியின் சார்பில் மேம்படுத்தப்பட்டுள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காவினை திறந்து வைத்து பார்வையிட்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ” தமிழ்நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளை அரசு – பொதுமக்கள் – தனியார் நிறுவனங்கள் பங்களிப்புடன் மேம்படுத்துவதில், ‘நமக்கு நாமே திட்டம்’ முக்கிய பங்கு வகிக்கிறது.

இத்திட்டத்தின் கீழ், எம்.ஓ.பி.வைஷ்ணவா மகளிர் கல்லூரி சார்பில், நுங்கம்பாக்கம், மாநகராட்சி மண்டலம்-9, 111-ஆவது வட்டத்தில் உள்ள மாநகராட்சி பூங்காவை ரூ.30 லட்சம் அளவில் புனரமைப்பு செய்து புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய பூங்காவை இன்று திறந்து வைத்தோம்.

குழந்தைகள் விளையாடும் பகுதி – உடற்பயிற்சி கூடம் – சிறு அரங்கம் – மேற்கூரையுடன் கூடிய நடைபயிற்சி பாதை போன்றவற்றைக் கொண்ட இந்தப் பூங்காவை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி மகிழ வாழ்த்துகிறோம். இதற்கான பங்களிப்பை செய்த எம்.ஓ.பி.வைஷ்ணவா மகளிர் கல்லூரிக்கு என் அன்பும், வாழ்த்தும்.”இவ்வாறு தெரிவித்தார்.

The post நுங்கம்பாக்கத்தில் மாநகராட்சி பூங்காவினை திறந்து வைத்து பார்வையிட்டார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Related Stories: