குருகிராமம் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையிலும் 534 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிதிக்கப்பட்டுள்ளது. இவைதவிர 7000 வாட்டர் ஹீட்டர்கள், 95 ரூம் ஹீட்டர்கள், 40 கேஸ் என பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த 2 வாரங்களில் பல்வேறு கட்டங்களாக இந்த சோதனைகள் நடந்ததாக ஒன்றிய அரசும், நுகர்வோர் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே BIS அமைப்பு சான்று பெற்ற பொருட்களை மட்டுமே விற்குமாறு அமேசான், ஃப்ளிப்கார்ட், மீசோ, மித்ரா, பிக்பாஸ்கெட் போன்ற ஆன்லைன் வணிக நிறுவனங்களுக்கு அந்த அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ISI தரச்சான்று இல்லாத மற்றும் ISI எண் உரிமம் இல்லாத பாதுகாப்பு அபாயம் ஏற்படுத்தகூடியவை என்றும் BIS அமைப்பு தெரிவித்துள்ளது. கடைகளில் உள்ள பொருட்களின் சான்று நிலையை அறிய BIS CARE APP-ஐ பயன்படுத்த வேண்டும் எனவும், ISI முத்திரை இல்லாத பொருட்களை காண நேர்ந்தால் அது குறித்து அந்த செயலியில் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post ISI சான்று பெறாத பொருட்கள் பறிமுதல்.. அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவன கிடங்குகளில் BIS அதிகாரிகள் சோதனை..!! appeared first on Dinakaran.