இந்த அறிவியல் கருத்தரங்கு குறித்து எஸ்ஆர்எம் குழுமத்தின் தலைவர் டாக்டர் ப. சத்யநாராயணன் பேசுகையில், ‘‘ஸ்பேஸ் 2025யின் இலக்கு இந்தியாவில் வழங்கப்பட்டு வரும் இதய சிகிச்சையின் தரநிலைகளை உயர்த்துவதில் பங்காற்றுவதே. சீரற்ற இதய செயல்பாடு, இதய மின்னணுவியல் கோளாறுகள், இதர இதயம் சார்ந்த நோய்களால் உலகளவில் 3.3 கோடி பேர்களுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இந்த எண்ணிக்கை 20 முதல் 40 லட்சம் பேர் வரை இருக்கலாம். இத்தனை பெரிய எண்ணிக்கையில் உள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்கும் பெரும் சவாலை இது போன்ற கருத்தரங்குகள் ஊக்கப்படுத்த உதவும்,’’ என்றார்.
ஸ்பேஸ் 2025ன் தலைமை ஒருங்கிணைப்பாளரும், எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனையின் இதய சிகிச்சை மைய இயக்குனருமான டாக்டர் டி.ஆர்.முரளிதரன் பேசுகையில், ‘‘இந்த இரண்டு நாள் கருத்தரங்கத்தில் பல்வேறு துறை வல்லுநர்கள் வழங்கிய விளக்கவுரைகளும், கருத்து பரிமாற்றங்களும், விவாதிக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்பங்களும் நம் நாட்டின் இதய மருத்துவத்தின் தரத்தை மேம்படுத்தும் என்பதில் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.
நம் நாட்டில் இதய செயல்பாட்டு கோளாறுகள் ஒப்பீட்டளவில் மேற்கு நாடுகளை விட தற்போது குறைவாக இருந்தாலும், அதிகரித்து வரும் வயோதிகர்களின் எண்ணிக்கை, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற இடர்பாடுகள் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் பெருமளவிலான பாதிப்புகளை குறித்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதனை சமாளிக்க ஸ்பேஸ் போன்ற மருத்துவ கருத்தரங்குகள் வழிகோலும்,’’ என்றார்.
The post எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனையில் இதய சிகிச்சை குறித்த 2 நாள் கருத்தரங்கம்: உலகளவில் புகழ் பெற்ற மருத்துவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.