ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளி அணைக்கட்டில் இருந்து ஊத்துக்கோட்டை ஏரிக்கு கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் ஆந்திர எல்லையில் தொடங்கி நாகலாபுரம் சாலை, சத்தியவேடு சாலை வழியாக ஏரிக்குச் செல்கிறது. இக்கால்வாய் கடந்த ஆண்டு இறுதியில் தூர்வாரப்பட்டது. இந்நிலையில், இந்த கால்வாய் ஓரத்தில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், கால்வாயில் கலந்து வெறும் கழிவுநீர் மட்டுமே கால்வாயில் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், ஏரி நீர் மாசடைந்து சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. எனவே, இக்கால்வாயில் கழிவுநீர் விடும் வீட்டு உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, கழிவு நீர் விடுவதை தடுத்து கால்வாயை தூர்வார வேண்டும் என நீர் வளத்துறை அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
The post கால்வாயில் கலக்கும் கழிவுநீர்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.