கோவை, மார்ச் 15: கோவை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், தற்போது படையில் பணிபுரிவோர் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கான சிறப்பு குறைகேட்பு முகாம் மற்றும் சுயவேலைவாய்ப்பு கருத்தரங்கு கூட்டம் வரும் 20.03.2025 அன்று காலை 11 மணிக்கு கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. மாவட்ட கலெக்டர் பவன்குமார் தலைமை தாங்குகிறார். எனவே, கோவை மாவட்டத்தை சேர்ந்த அனைத்து முன்னாள் படைவீரர்கள் மற்றும் படைவீரர் குடும்பத்தினர் இம்முகாமில் கலந்துகொண்டு, தங்களது விண்ணப்பங்களை இரட்டை பிரதிகளில் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பவன்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
The post முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் appeared first on Dinakaran.