புளியங்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழா கூட்டம்

புளியங்குடி,மார்ச் 15: புளியங்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா கூட்டம் நடைபெற்றது. இதில் வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் வேலு தலைமை வகித்தார். கட்சியின் வரலாறு என்ற தலைப்பில் ஏஐடியுசி மாநில தலைவர் காசி விஸ்வநாதன், அமைப்பாய் திரள என்ன செய்ய வேண்டும் என்ற தலைப்பில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் மோகன் குமார், இசக்கி துரை ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் மாவட்ட நிர்வாக குழுவை சேர்ந்த பாலசுப்ரமணியன், மாரியப்பன், நிர்வாகிகள் பால விநாயகர், ஜெயகணேசன், சுப்ரமணியன், அய்யனார், பிச்சையா, முருகன், வேல்சாமி, கவுன்சிலர் பாக்கியம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட குழு உறுப்பினர் சீனிவாசன் நன்றி கூறினர்.

The post புளியங்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழா கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: