×

கூட்டுறவு கல்வி நிதிக்கு ரூ.21.76 லட்சம் வழங்கல்

 

காஞ்சிபுரம்: கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி, கூட்டுறவு கல்வி நிதிக்காக ரூ.21.76 லட்சம் காசோலை வழங்கப்பட்டது.  செங்கல்பட்டு எம்ஜிஆர் மாவட்ட பொது ஊழியர்கள் கூட்டுறவு சங்கத்தின் 2022-2023ம் ஆண்டில் ஈட்டிய இலாபத் தொகையில் இருந்து காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்கு செலுத்த வேண்டிய கூட்டுறவு ஆராய்ச்சி வளர்ச்சி நிதி மற்றும் கூட்டுறவு கல்வி நிதிக்கு 21 லட்சத்து 76 ஆயிரத்து 398 ரூபாய்க்கான காசோலையினை, செங்கல்பட்டு எம்ஜிஆர் மாவட்ட பொது ஊழியர்கள் கூட்டுறவு சங்கத்தின் கூட்டுறவு சார்பதிவாளர் செயலாட்சியர் ந.பிரேம்குமார், காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீயிடம் வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாளர் வி.முரளி, சங்க செயலாளர் கே.சங்கர் மற்றும் உலகநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

The post கூட்டுறவு கல்வி நிதிக்கு ரூ.21.76 லட்சம் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Chengalpattu MGR District Public Employees Cooperative Society ,Kanchipuram District Cooperative… ,Dinakaran ,
× RELATED மதுராந்தகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி