நாகர்கோவில்,மார்ச் 14: கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூடு அருகில் அமைந்துள்ள முகில் கல்வி குழுமத்தின் மூன்றாம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மகிழ்வை குழுமத்தின் தலைவர் அன்வர் கபீர் தலைமை தாங்கினார். முகில் சட்டக் கல்லூரி பேராசிரியர் அமுல்ராஸ்லின் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜெயில்லால் தலைமை உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்துகொண்டு மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினார் .
இதில் மாணவர்கள் சட்ட நுணுக்கங்களை எவ்வாறு தெரிந்து கொள்ள வேண்டும், சமுதாயத்திற்கு எவ்வாறு உதவ வேண்டும், சட்டத்தை எவ்வாறு கொண்டு செலுத்த வேண்டும் என்பது போன்ற கருத்துக்களை விரிவாக எடுத்துரைத்தார். இறுதியாக முகில் பாராமெடிக்கல் கல்லூரி முதல்வர் ஜெனி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை இயக்குனர் ராஜா, அலுவலக நிர்வாகி சுரேந்திரன் மற்றும் தினேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
The post முகில் கல்வி குழுமத்தின் 3ம் ஆண்டு விழா appeared first on Dinakaran.
