×

திருப்போரூர் கந்தசுவாமி கோயில் தெப்போற்சவம்

 

திருப்போரூர், மார்ச் 13: திருப்போரூர் கந்தசுவாமி கோயில், சரவணப்பொய்கையில் தெப்ப உற்சவம் நேற்று நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். திருப்போரூர் கந்தசுவாமி கோயிலின் பிரம்மோற்சவ விழா கடந்த 3ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின், முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 9ம்தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, 10ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று பகல் 12 மணிக்கு சரவண பொய்கையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

உற்சவமூர்த்தி சரவணப் பொய்கையில் இறங்கி நீராடும்போது, பக்தர்கள் நான்கு கரைகளிலும் இறங்கி நீராடினர். இதைத்தொடர்ந்து, இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது, பக்தர்கள் வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி நீரில் மிதக்க விட்டு வழிபட்டனர். அனைத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 

The post திருப்போரூர் கந்தசுவாமி கோயில் தெப்போற்சவம் appeared first on Dinakaran.

Tags : Thiruporur Kandaswamy ,Temple ,Theppottsavam ,Thiruporur ,Thiruporur Kandaswamy Temple ,Saravana Poigai ,Brahmotsavam ,Thiruporur Kandaswamy Temple Theppottsavam ,
× RELATED மதுராந்தகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி