இந்தியா மீது அமெரிக்கா இதுவரை பரஸ்பர வரிகளை விதிக்கவில்லை: ஒன்றிய அரசு விளக்கம்

புதுடெல்லி: “இந்தியா மீது அமெரிக்கா இதுவரை பரஸ்பர வரிகளை விதிக்கவில்லை” என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஜிதின் பிரசாதா அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், “இந்தியா, அமெரிக்கா இருநாடுகளும் பல்வேறு துறைகளில் பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளன.

மேலும், சந்தை அணுகலை அதிகரிப்பது, வரி மற்றும் வரி அல்லாத தடைகளை குறைப்பது, விநியோக சங்கிலி ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது, ஆகியவற்றில் கவனம் செலுத்தும். இருதரப்பு வர்த்தக உறவுகளை பரஸ்பர நன்மை பயக்கும், மற்றும் நியாயமான முறையில் விரிவுப்படுத்த அமெரிக்காவுடன் இந்தியா தொடர்ந்து பணியாற்றி வருகிறது. இதுஒரு தொடர்ச்சியான முயற்சி.

மாறி வரும் வணிக சூழலில், கணிசமான வர்த்தகத்தில் சுங்க வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகள் குறைக்கப்படுகின்றன அல்லது நீக்கப்படுகின்றன. இதில் முன்னுரிமை மற்றும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை நோக்கி இந்தியா முன்னேறுகிறது. இந்தியா மீது அமெரிக்கா இதுவரை எந்தவொரு பரஸ்பர வரியும் விதிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

The post இந்தியா மீது அமெரிக்கா இதுவரை பரஸ்பர வரிகளை விதிக்கவில்லை: ஒன்றிய அரசு விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: