தேர்தல் செயல்முறைகளை மேம்படுத்த அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை: தேர்தல் ஆணையம் அழைப்பு

புதுடெல்லி: மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வாக்காளர் பட்டியல் பிரச்னைகள் குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். இது குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளும் கேள்விகளை எழுப்பியுள்ளன. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் அரசியல் கட்சிகளுக்கு நேற்று கடிதம் அனுப்பப்பட்டது.

இந்த கடிதத்தில், தேர்தல் செயல்முறைகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக கட்சி தலைவர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்த ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. தேர்தல் பதிவு அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகள் அளவில் தீர்க்கப்படாத ஏதேனும் பிரச்னை இருந்தால் ஏப்ரல் 30ம் தேதிக்குள் அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளிடம் இருந்து பரிந்துரைகளையும் ஆணையம் கோரியுள்ளது.

* பிஜூ ஜனதா தளம் கோரிக்கை மனு
கடந்த 2024ம் ஆண்டு ஒடிசாவில் நடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் பதிவான வாக்குகளில் அசாதாரண மாறுபாடு இருப்பதாக பிஜூ ஜனதா தளம் புகார் எழுப்பியது. இதுதொடர்பாக கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கடந்த ஆண்டு புகார் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் செயல்முறையில் சுயாதீன தணிக்கை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பிஜூ ஜனதா தளத்தின் பிரதிநிதிகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

The post தேர்தல் செயல்முறைகளை மேம்படுத்த அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை: தேர்தல் ஆணையம் அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: