மழை தண்ணீர் தேங்குவதை தடுக்க பேவர்பிளாக் தளம்?

நாசரேத், மார்ச் 12: நாசரேத் வாரச்சந்தையில் மழைநீர் தேங்குவதை தடுக்க பேவர்பிளாக் தளம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாசரேத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்றும் வாரச்சந்தை நடந்தது. நாசரேத் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள், இச்சந்தையில் பொருட்களை வாங்கிச் செல்வார்கள். நேற்று காலையில் பெய்த மழை காரணமாக நாசரேத் வாரச்சந்தையின் உட்புறம் கடைகளின் முன்பு தண்ணீர் தேங்கி அனைத்து பகுதிகளும் சகதிகாடாக காட்சியளித்தது.

இதனால் சந்தைக்கு பொருட்கள் வாங்க வந்த மக்கள், மிகுந்த சிரமத்திற்குள்ளாவதுடன் பல இன்னல்களுக்கு ஆளாகினர். மழையால் மக்கள் கூட்டமும் குறைவாக இருந்ததால் வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனர். எனவே சம்பந்தப்பட்ட நாசரேத் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு நாசரேத் வாரச்சந்தையின் உட்புறம் முழுவதும் மேற்கூரை மற்றும் பேவர் பிளாக் தளம் அமைக்க வேண்டும் என நாசரேத் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மழை தண்ணீர் தேங்குவதை தடுக்க பேவர்பிளாக் தளம்? appeared first on Dinakaran.

Related Stories: