குன்னூர், மார்ச் 12 : மழையால், குன்னூர் மலைப்பாதையில் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டு வாகனங்கள் இயக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது காட்டுத் தீ ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று 4 மணிக்கு மேல் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளான அருவங்காடு, வண்டிச்சோலை, வெலிங்டன், காட்டேரி , பர்லியார் போன்ற பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் மழை நீர் ஆங்காங்கே பெருக்கெடுத்து ஓடியது.
வெயில் தாக்கம் குறைந்து குளு, குளு கால நிலை நிலவுகிறது. இருப்பினும் குன்னூர் மலைப்பாதையில் செல்லக்கூடிய வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகனங்களை இயக்குகின்றனர். மேலும் காட்டுத் தீ அபாயம் குறைந்தது. இந்த மழை தேயிலை மகசூலுக்கு ஏற்ற காலநிலை என்பதால் தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். அதேபோல சுற்றுலா பயணிகளும் இந்த காலநிலையை அனுபவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
The post குன்னூர் மலைப்பாதையில் மழையால் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டு வாகனம் இயக்கம் appeared first on Dinakaran.