கோவை, மார்ச் 11: கோவையை தலைமையிடமாக கொண்டு கிருஷ்ணா நாட்டிய கலாசேத்ரா 46 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. இதில், ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் நடனம் பயின்றுள்ளனர். தற்போது அந்த நாட்டிய பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி ஆசிரியர்கள் பல தனியார் பள்ளிகளில் கம்பராமாயண நிகழ்ச்சி நடத்தி உள்ளனர். மேலும், பல ஊர்களிலும், நகரங்களிலும், கோவில் திருவிழாக்களில் பக்தி பரதநாட்டிய நிகழ்ச்சி நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில் சரவணம்பட்டி பகுதியில் உள்ள ரத்தினகிரி குமரக் கடவுள் (எ) மருதாசலசாமி கோயில் திருநெறிய தீந்தமிழ்த் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவில், கிருஷ்ணா நாட்டிய கலாசேத்ரா பக்தி பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 20க்கும் மேற்பட்ட மாணவிகள் நடனமாடினார்கள். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியில் அப்பள்ளி நிறுவனர் பொன்னம்பலம், காவ்யா ஸ்ரீ, ஹரிணி, பொன்னுசாமி உள்ளிட்ட நடன ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
The post கிருஷ்ணா நாட்டிய கலாசேத்ராவின் பரதநாட்டிய நிகழ்ச்சி appeared first on Dinakaran.