வேலைவாய்ப்பு முகாமில் குவிந்த மாணவர்கள்

 

கோவை, மார்ச் 5: தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கோவை அரசு கலைக்கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. இதனை கல்லூரியின் முதல்வர் எழிலி துவக்கி வைத்தார். இந்த வேலைவாய்ப்பு முகாமில் கோவை சேர்ந்த அரசு கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் என 26 கல்லூரிகள் பங்கேற்றன. இந்த முகாமில் பங்கேற்க மொத்தம் 4,250 பேர் பதிவு செய்து இருந்தனர். இவர்களில், 2,291 மாணவ, மாணவிகள் முகாமில் பங்கேற்றனர்.

இம்முகாமில், 43 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்களின் நிறுவனங்களுக்கு மாணவர்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்தனர். இதில், எழுத்து தேர்வு, குழு விவாதம், நேர்காணல் என நிறுவனங்களின் தன்மைக்கு ஏற்ப தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த தேர்வுகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இந்த முகாமின் மூலம் குறைந்தபட்சம் மாதம் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையிலான சம்பளத்தின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த முகாம் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக வேலைவாய்ப்பு பெற்றவர்கள் தெரிவித்தனர்.

The post வேலைவாய்ப்பு முகாமில் குவிந்த மாணவர்கள் appeared first on Dinakaran.

Related Stories: