மேலும் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிரதீப்பின் உடல் மீட்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மூத்த காவல் கண்காணிப்பாளர் ராஜ் கரண் நாயர் கூறுகையில், ‘ புதுமணத் தம்பதிக்குள் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. அறையின் கதவு உள்தாழிட்டு பூட்டப்பட்டிருந்தது. முதற்கட்ட விசாரணையில், தனது மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, மணமகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. ெதாடர்ந்து விசாரணை நடந்து வருகிறது’ என்றார்.
The post திருமணமான சில மணி நேரங்களில் முதலிரவில் மனைவியை கொன்று மணமகன் தூக்கிட்டு தற்கொலை: உத்தரபிரதேசத்தில் நடந்த சோகம் appeared first on Dinakaran.
