இது குறித்த புகாரின்பேரில் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் மாயமான மூன்று பேரையும் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் லோஹாய் மல்ஹார் அருகே நீர்நிலையில் டிரோன் மூலமாக தேடியபோது அவர்களது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. சடலங்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின்னரே அவர்கள் இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
யோகேஷ் மற்றும் தர்ஷன் மர்ஹூனில் வசிப்பவர்கள். வருண் தெஹோட்டாவை சேர்ந்தவர். இந்த பகுதியில் தீவிரவாதிகள் அதிகம் இருப்பதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளில் பல தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. கடந்த மாதம் இதே பகுதியில் தீவிரவாத தாக்குதலில் இரண்டு பேர் இறந்து கிடந்ததும் குறிப்பிடத்தக்கது. எனவே உயிரிழந்த மூன்று பேரும் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
The post தீவிரவாதிகள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் காஷ்மீரில் மாயமான 3 பேர் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.
