லாரி மோதி பைக்கில் சென்ற மினிபஸ் டிரைவர் பலி

எட்டயபுரம், மார்ச் 8: எட்டயபுரம் அருகே உள்ள கொடுக்காம்பாறையை சேர்ந்த முருகன் மகன் மாரிச்சாமி (28). இவர், தூத்துக்குடியில் மினி பஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை பணி முடிந்து பைக்கில் கோவில்பட்டிக்கு சென்றார். எட்டயபுரம் அருகேயுள்ள குமாரகிரி புதூர் விலக்கு அடுத்து சென்றபோது கயத்தாரில் இருந்து எம்.சான்ட் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி மோதியதில் படுகாயமடைந்தார். தகவலறிந்து சென்ற எட்டயபுரம் போலீசார், படுகாயமடைந்தவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாரிச்சாமி இறந்தார். விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிந்து லாரி டிரைவர் எட்டயபுரம் அருகே உள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்த காளிமுத்து மகன் கருப்பசாமி (27) என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.

The post லாரி மோதி பைக்கில் சென்ற மினிபஸ் டிரைவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: